close
Choose your channels

கமல்ஹாசனின் 'விக்ரம்' பட பாணியில் படத்தை தொடங்கும் அட்லி!

Tuesday, August 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் பாணியில் அட்லி தனது அடுத்த படத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் துபாயில் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே டீசர் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே டீசர் வெளியானது போல் அட்லியும் அதே பாணியில் டீசரை படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் விரைவில் டீசர் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது

இந்த டீசரில் படத்தின் டைட்டில் தெரியவரும் என்றும் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தின் டைட்டில் ’ஜவான்’ என்றும் கூறப்படுகிறது. மேலும் ஷாருக்கான் இந்த படத்தில் வில்லன் மற்றும் ஹீரோ ஆகிய இரண்டு கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் ஒரு கேரக்டருக்கு நயன்தாரா ஜோடி என்றும் கூறப்படுகிறது. ஏஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த படம் உருவாகிறது என்றும் இந்த டீசரை வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.