close
Choose your channels

நடிகை பாவனாவின் 88வது படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

Tuesday, June 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் மலையாள நடிகையான பாவனாவின் 88வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்த நாளான இன்று வெளியாகி உள்ளதை அடுத்து அந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.

மலையாள திரை உலகின் முன்னணி நடிகையாக கடந்த 2000ஆம் ஆண்டுகளில் இருந்தவர் நடிகை பாவனா. இவர் மிஷ்கின் இயக்கிய முதல் திரைப்படமான ’சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின் கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர், ராமேஸ்வரம், அஜித் நடித்த அசல் உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்தார்.

இந்த நிலையில் இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 88 வது திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’தி டோர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நடிகை பாவனாவின் ’தி டோர்’ என்ற திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்பட பலமொழிகளில் தயாராகி வருவதாகவும் ஜெயிடடேவ் என்பவர் இந்த படத்தை இயக்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment