மணமகன் கழுத்தில் தாலி கட்டிய குட்டி த்ரிஷா.. ஒரு ஜாலியான திருமண போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Friday,March 29 2024]

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தில் சிறு வயது த்ரிஷாவாக நடித்திருந்த நடிகை கௌரி கிஷான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணமகனுக்கு கழுத்தில் தாலி கட்டிய ஜாலியான திருமண புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

’96’ திரைப்படத்தில் குட்டி த்ரிஷாவாக நடித்த கௌரி கிஷன் அந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த எம்எஸ் பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் உடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கௌரி கிஷான், ஆதித்யா பாஸ்கருக்கு தாலி கட்டுவது போன்ற காட்சிகள் உள்ளன.

ஆதித்யா பாஸ்கர் மற்றும் கெளரி கிஷான் ஆகிய இருவரும் இணைந்து ’ஹாட்ஸ்பாட்’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் புரமோஷனுக்காக இந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புரமோஷனுக்காக இந்த ஜாலியான திருமண புகைப்படங்களை கௌரி கிஷான் பதிவு செய்திருந்தாலும் இதை உண்மையான திருமணம் என்று நினைத்து சிலர் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் பலர் இதை புரமோஷன் என்பதை புரிந்து கொண்டேன் ஜாலியான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

நம்பர் ஒன் இடத்தை பிடித்த த்ரிஷா .. 'தக்லைஃப்' படத்திற்கு சம்பளம் இத்தனை கோடியா?

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் நடித்த பிறகு த்ரிஷா காட்டில் பேய் மழை பொழிகிறது என்றும் அவர் தொடர்ச்சியாக

இன்று வெளியாகும் ஆண்ட்ரியா படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்.. என்ன காரணம்..!

நடிகை ஆண்ட்ரியா நடித்த 'கா தி பாரஸ்ட்' என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் இந்த படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தனுஷின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்? 10 நிமிடத்தில் எடுக்கப்பட்ட முடிவு..!

தனுஷின் அடுத்த திரைப்படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குக் வித் கோமாளி பிரபலத்துடன் அம்மு அபிராமி காதலா? கலாய்க்கும் ஷிவாங்கி, குரேஷி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அம்மு அபிராமி அந்த நிகழ்ச்சியின் பிரபலம் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 வருடங்களுக்கு முன் தாக்கல் செய்த விவாகரத்து மனு.. திடீரென மனைவியுடன் சமரசம் ஆன 'பேட்ட' நடிகர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'பேட்ட' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று ஆண்டுகளுக்கு