close
Choose your channels

மணமகன் கழுத்தில் தாலி கட்டிய குட்டி த்ரிஷா.. ஒரு ஜாலியான திருமண போட்டோஷூட்..!

Friday, March 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தில் சிறு வயது த்ரிஷாவாக நடித்திருந்த நடிகை கௌரி கிஷான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணமகனுக்கு கழுத்தில் தாலி கட்டிய ஜாலியான திருமண புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

’96’ திரைப்படத்தில் குட்டி த்ரிஷாவாக நடித்த கௌரி கிஷன் அந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த எம்எஸ் பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் உடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கௌரி கிஷான், ஆதித்யா பாஸ்கருக்கு தாலி கட்டுவது போன்ற காட்சிகள் உள்ளன.

ஆதித்யா பாஸ்கர் மற்றும் கெளரி கிஷான் ஆகிய இருவரும் இணைந்து ’ஹாட்ஸ்பாட்’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் புரமோஷனுக்காக இந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புரமோஷனுக்காக இந்த ஜாலியான திருமண புகைப்படங்களை கௌரி கிஷான் பதிவு செய்திருந்தாலும் இதை உண்மையான திருமணம் என்று நினைத்து சிலர் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் பலர் இதை புரமோஷன் என்பதை புரிந்து கொண்டேன் ஜாலியான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.