close
Choose your channels

கிளாமரில் பட்டையைக் கிளப்பும் "காலா" பட நாயகியின் செம வைரல் புகைப்படம்!

Monday, June 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "காலா". இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சின்ன வயது காதலியாக பாலிவுட் முன்னணி நடிகை ஹீமா குரோஷி நடித்து இருப்பார். இந்தியில் இவர் "கேங்ஸ் ஆப் வசேப்பூர்", "ஹைவே", "பத்லாபூர்" போன்ற திரைப்படங்களில் போல்டான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகை ஹீமா குரோஷி தமிழில் "காலா" படத்தில் நடித்து இருந்தார். தற்போது தல அஜித்தின் "வலிமை திரைப்படத்திலும் இவர் இடம் பெற்றிருப்பதாகப் படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் "Army of dead" படத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார். அதோடு இவரது நடிப்பில் "லீலா" எனும் வெப் சீரிஸ் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படி பாலிவுட், ஹாலிவுட், வெப் சீரிஸ், தமிழ் எனப் படு பிசியாக கலக்கிக் கொண்டு இருக்கும் நடிகை ஹீமா குரோஷி கொரோனா நேரத்தில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் அவ்வபோது விதவிதமான போட்டோ ஷுட்களை நடத்தி அந்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் முதல் முறையாக கிளாமர் கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்தப் புகைப்படத்தில் அவர் உடல் மெலிந்து இருப்பதோடு கிளாமரிலும் கலக்கி இருக்கிறார். நடிகை ஹீமா குரோஷியின் இந்தப் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment