close
Choose your channels

ஜோதிகாவுக்கும் மிர்ச்சி செந்திலுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? இருவரையும் இயக்கும் பிரபல நடிகர்..!

Tuesday, September 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஜோதிகா மற்றும் நடிகை மிர்ச்சி செந்தில் ஆகிய இருவரும் ஒரே ஆண்டில் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்ற தகவலை மிர்ச்சி செந்தில் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஜோதிகாவுடன் மிர்ச்சி செந்தில் நடிக்கும் விளம்பர படம் ஒன்று படமாக்கப்பட்ட நிலையில் இந்த படத்தை நடிகர் கிருஷ்ணா இயக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரீஎண்ட்ரி ஆகி தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல் தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக இருப்பவர் மிர்ச்சி செந்தில். இவர் சரவணன் மீனாட்சி’ உட்பட பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஜோதிகா மற்றும் மிர்ச்சி செந்தில் ஆகிய இருவரும் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளனர். இந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. இந்த விளம்பர படத்தை நடிகர் கிருஷ்ணா இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விளம்பர படம் விரைவில் வெளியாக உள்ள உள்ள நிலையில் மிர்ச்சி செந்தில் தனது சமூக வலைத்தளத்தில் ஜோதிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் நடிகை ஜோதிகாவும் தானும் ஒரே நாளில் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள் என்ற ஆச்சரியமான தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார். அதாவது கடந்த 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தான் இருவரும் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment