தலைவியும் சுபவீக்களும் கள்ள மௌனம் காப்பது ஏன்? நடிகை கஸ்தூரி கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நிலையில் அந்த பள்ளியை மூட வேண்டும் என்றும், அந்த பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்றும், பள்ளியை அரசுடமையாக்க வேண்டும் என்றும் ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை கூறினார்கள்
இந்த நிலையில் பத்மா சேஷாத்திரி பள்ளியைப் போலவே சென்னையில் வேறு சில பள்ளிகளிலும் இதேபோன்ற பாலியல் குற்றச்சாட்டு நடந்த நிலையில் கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சம்பந்தப்பட்ட அந்த பள்ளிகளை மூட வேண்டும் என்றும் யாருமே குரல் கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
செட்டிநாடு பள்ளி, மகரிஷி, இன்னும் பல சென்னை பள்ளிகளில் தொடர் போஸ்கோ கைதுகள். துரிதமாக நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி. ஏன் இதை எந்த அமைச்சரும் பிரபலமும் பாராட்டவில்லை, ஏன் எந்த மீடியாவும் பகிரங்கப்படுத்தவில்லை?? பத்ம சேஷாத்திரி பள்ளியை மூட வேண்டும் என்று கொக்கரித்த தலைவியும் சுபவீக்களும் திராவிடன் ஸ்டாக்குகளும் இப்போது கள்ள மௌனம் காப்பது ஏன்? ஜாதி பாசமா? பண பேரமா இல்லை பயமா? ஒருவேளை இதுதான் பகுத்தறிவா? என்று பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் கஸ்தூரியின் இந்த பதிவுக்கும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் அதிகமாக பதிவாகி வருகிறது.
பத்ம சேஷாத்திரி பள்ளியை மூட வேண்டும் என்று கொக்கரித்த தலைவியும் சுபவீக்களும் dravidian stockகுகளும் இப்போது கள்ள மௌனம் காப்பது ஏன்? ஜாதி பாசமா பண பேரமா இல்லை பயமா? ஒருவேளை இதுதான் பகுத்தறிவா? #Predator_Persecution_Pagutharivu_Politics
— Kasturi Shankar (@KasthuriShankar) June 1, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments