என் குழந்தைக்கு பிறந்தநாள்… செம ஷாக் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

  • IndiaGlitz, [Friday,September 03 2021]

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மறைந்த பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “மகாநடி“ திரைப்படத்தில் நடித்து தேசிய விருதுபெற்றார். அதோடு தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் “எனது ஆண் குழந்தைக்கு 3 வயதாகிவிட்டது. இதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் முதல்நாளில் பார்த்த மாதிரியே இருக்கிறது. எனது சிறந்த அல்லது இருண்ட நாட்களில் நீங்கள் என்னை நிரப்பும் மகிழ்ச்சி கற்பனை செய்ய முடியாதது. என்மீது அளவுகடந்த அன்பு செலுத்துகிறீர்கள். நான் உன்னை நேசிக்கிறேன் அன்பே Nyke“ என்று தன்னுடைய செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் “அண்ணாத்த“ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரபல இயக்குநர் செல்வராகவன் முதல் முறையாக நடித்திருக்கும் “சாணிக்காயிதம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

தமிழைத் தவிர தெலுங்கில் பிரபல நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் “சர்காடு வாரி பாட்டா“  எனும் திரைப்படத்திலும் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகிவரும் “அரபிக்கடல் சிங்கம்” படத்திலும் இணைந்து நடித்துவருகிறார். இதைத்தவிர நடிகர் சூர்யா தயாரிப்பில் இயக்குநர் பாலா இயக்கவிருக்கும் புதுப்படம் ஒன்றிலும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியது.

இப்படி சினிமாவில் படு பிசியாக இருந்துவரும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஓய்வாக இருக்கும் நேரத்தில் முழுக்க முழுக்க செல்ல நாயுடன் நேரத்தை செலவிடுவதையே விரும்புகிறார். அத்தகைய பெஸ்ட் பார்ட்னர் Nyke பிறந்தநாளை ஒட்டி புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

More News

ஐஸ்வர்யா மேனனின் வொர்க்-அவுட் வீடியோ: குவியும் லைக்ஸ்கள்

தமிழ் நடிகையான ஐஸ்வர்யா மேனன் ஒர்க்அவுட் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்தே இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

ஜல்லிக்கட்டில் நாட்டுமாடுகள் மட்டுமே....! அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு....!

இனி வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டுமாடுகளுக்கு மட்டும், அனுமதி தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 வருட கடின உழைப்பு.... இதனால் வாய்ப்புகள் பறிபோனது....! பிரபல சீரியல் நடிகர் பேட்டி....!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "வேலைக்காரன்" என்ற  சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர்

'எனிமி' படத்தின் அடுத்தகட்ட பணி: விஷால் வெளியிட்ட வீடியோ!

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த 'எனிமி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சென்னை போலீஸ் கமிஷனரை திடீரென சந்தித்த ஆர்யா: என்ன காரணம்?

ஆர்யா மீது இலங்கையைச் சேர்ந்த ஜெர்மன் வாழ் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை போலீஸ் கமிஷனரை ஆர்யா திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.