close
Choose your channels

விஜய்க்கு புதிய வாழ்க்கை.. புதிய ஆரம்பம்.. நடிகை லைலாவின் ஜாலியான பேட்டி..!

Saturday, June 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் இன்னும் ஒரு வாரத்தில் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவருக்கு ஒரு புதிய வாழ்க்கை ,புதிய ஆரம்பம் தொடங்க இருப்பதாக நடிகை லைலா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டி தெரிவித்துள்ளார்.

நடிகை லைலா கடந்த 2000 ஆண்டுகளில் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் அவர் ஒரு படத்தில் கூட விஜய் உடன் இணைந்து நடிக்கவில்லை. ’உன்னை நினைத்து’ என்ற திரைப்படத்தில் விஜய் மற்றும் லைலா இணைந்து நடிக்க இருப்பதாக இருந்த நிலையில் போட்டோஷூட் புகைப்படங்கள் கூட வெளியாகின. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விஜய் விலகி விட அதன் பிறகு அந்த படத்தில் சூர்யா நடித்திருந்தார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் லைலா நடித்து வரும் நிலையில் அந்த படம் குறித்த முக்கிய தகவல்கள், தன்னுடைய கேரக்டர், விஜய்யுடன் இருக்கும் காம்பினேஷன் காட்சிகள் உட்பட சில விஷயங்களை நமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு அவர் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவருக்கு ஒரு புதிய வாழ்க்கை, புதிய அத்தியாயம் இருக்கிறது என்றும் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் ’உன்னை நினைத்து’ படத்திற்காக போட்டோஷூட் எடுக்கும்போது அவர் எப்படி இருந்தாரோ, அதே போல் தான் இன்றும் உள்ளார் என்றும் அவரிடம் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். நடிகை லைலாவின் முழு பேட்டியை பார்க்க இந்த வீடியோவை கிளிக் செய்யவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment