நடிகை லைலாவுக்கு மல்லிகைப்பூ கொடுத்தது யார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Sunday,May 08 2022]

கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை லைலாவுக்கு தமிழ்நாட்டு பெண் ஒருவர் மல்லிகைப்பூ கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

விஜயகாந்த் நடித்த ’கள்ளழகர்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் ’முதல்வன்’ ’பார்த்தேன் ரசித்தேன்’ ’தில்’, ‘மௌனம் பேசியதே’, ‘பிதாமகன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லைலா. இவரது கன்னக்குழி சிரிப்பிற்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை லைலா கடந்த 2006ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்தபின் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. லைலாவுக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பதும் சமீபத்தில் தனது இரண்டு மகன்களுடன் கூடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் லைலா தமிழ் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். பிரசாந்த் நடித்துவரும் ’அந்தகன்’ என்ற திரைப்படத்திலும், கார்த்தி நடித்து வரும் ’சர்தார்’ என்ற திரைப்படத்திலும் அவர் தற்போது நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் லைலா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் தனக்கு தமிழ்நாட்டு பெண் ஒருவர் மல்லிகைப்பூ கொடுத்த புகைப்படங்களை பதிவுசெய்துள்ளார். தமிழக மக்கள் எப்போதும் அன்பானவர்கள் என்றும் தமிழ் குடும்பங்கள் மிகவும் அன்பு செலுத்துபவர்கள் என்றும் எனக்கு மல்லிகைப்பூ கொடுத்த இந்த பெண்ணுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். லைலா மல்லிகைப்பூவுடன் உள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

More News

நீதான் என் முதல், நீதான் என் இளவரசன்: அன்னையர் தினத்தில் காஜல் அகர்வாலின் உருக்கமான பதிவு!

 நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது முதல் அன்னையர் தினத்தில் குழந்தை குறித்து உருக்கமான பதிவு செய்துள்ளார்.

'பாரதி கண்ணம்மா' நடிகையின் முதல் அன்னையர் தினம்: மாஸ் புகைப்படங்கள்!

ஒவ்வொரு ஆண்டு மே 8ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய அன்னையருடன் கூடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சு: 'ஐங்கரன்' ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்!

ஜிவி பிரகாஷ் நடிப்பில், ரவி அரசு இயக்கத்தில் உருவான 'ஐங்கரன்' திரைப்படம் நேற்று அதாவது மே 6ஆம் தேதி ரிலீசாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி தள்ளி

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு: வைரல் புகைப்படங்கள்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா-ரியாஸ் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.