close
Choose your channels

எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சு: 'ஐங்கரன்' ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்!

Saturday, May 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடிப்பில், ரவி அரசு இயக்கத்தில் உருவான ‘ஐங்கரன்’ திரைப்படம் நேற்று அதாவது மே 6ஆம் தேதி ரிலீசாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஒருசில பிரச்சனைகள் இன்னும் முடியாததால் ரிலீஸ் ஆகவில்லை என்றும் ஆனால் விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சில மணி நேரத்திற்கு முன்னர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஐங்கரன்’ படத்திற்கான அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விட்டது என்றும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மாலை 4 மணிக்கு தனுஷ் அறிவிப்பார் என்றும் தெரிவித்திருந்தார் .

இந்த நிலையில் சற்று முன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஐங்கரன்’ திரைப்படம் மே 12ஆம் தேதி வெளியாகும் என்றும் இந்த படத்திற்கு ஏற்கனவே பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ளதால் படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ‘ஐங்கரன்’ திரைப்படம் மே 12ஆம் தேதி ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ், மகிமா நம்பியார், மடோனா செபாஸ்டியன், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.