close
Choose your channels

ஆரஞ்சு உடையில் அசத்தும் பேரழகி… நடிகை மாளவிகா மோகனன் கிளாமர் பிக் வைரல்!

Saturday, October 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “பேட்ட“. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “மாஸ்டர்“ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

தற்போது இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கித்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் “மாறன்“ திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். கூடவே பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர் ரவிஉதய்வார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் சதுர்வேதி நடிப்பில் உருவாகிவரும் “யுத்ரா“ படத்திலும் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைத்தளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை மாளவிகா மோகனன் தனது கிளாமர் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இதனால் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஏராளமான ஃபாலோயர்கள் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆரஞ்சு வண்ண உடையில், பாந்தினி டிசைன் போடப்பட்ட லெகங்கா உடையை அணிந்து நடிகை மாளவிகா மோகனன் எடுத்துக்கொண்ட போட்டோஷுட் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் படு வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் இந்தப் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்களை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment