close
Choose your channels

இன்ஸ்டாகிராமில் பிகினி வீடியோவை வெளியிட்ட திருமணமான இளம் நடிகை!

Monday, May 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் மனீஷா யாதவ். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையுடன் கூடிய வீடியோவை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘வழக்கு எண் 18/9’ என்ற படத்திற்கு பின்னர் சுசீந்திரனின் ’ஆதலினால் காதல் செய்வீர்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் மனிஷா யாதவ். இவர் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தனது கணவரின் புகைப்படத்தை அவர் டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் 2018 ஆம் ஆண்டு ’ஒரு குப்பை கதை’ மற்றும் ’சண்டிமுனி’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மனிஷா யாதவ், தற்போது பிகினி உடையுடன் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.