close
Choose your channels

கணவர் மறைவுக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் மீனா.. மேக்கப் போடும் வீடியோ வைரல்!

Saturday, December 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மீனாவின் கணவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காலமான நிலையில் தற்போது அவர் கணவர் மறைவுக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மேக்கப் போடும் வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சிவாஜி கணேசன் நடித்த ’நெஞ்சங்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா அதன்பிறகு ’அன்புள்ள ரஜினிகாந்த்’ உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் நாயகியாக மாறிய மீனா, ரஜினிகாந்த் நடித்த ’முத்து’ ’எஜமான்’ கமல்ஹாசன் நடித்த ’அவ்வை சண்முகி’ அஜித் நடித்த ’சிட்டிசன்’ உள்பட பல படங்களில் நடித்தார்.

இந்தநிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி காலமானார். இதனை அடுத்து அவர் பெரும் சோகத்துடன் இருந்த நிலையில் அவருடைய திரையுலக தோழிகள் அவருக்கு ஆறுதல் கூறி அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீனா ஒரு விளம்பர படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் அந்த படத்திற்காக மேக்கப் போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் மீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.