கடவுளை மன்னிக்க ஒரே காரணம் இதுதான்: மேக்னா ராஜ்

  • IndiaGlitz, [Thursday,May 05 2022]

நான் கடவுளை மன்னிக்க ஒரே காரணம் இதுதான் என மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியும் நடிகையுமான மேக்னாராஜ் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஆக்சன் கிங் அர்ஜுனின் உறவினரான சிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னாராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் மேக்னாராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது திடீரென சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மரணத்தின் போது 4 மாத கர்ப்பிணியாக இருந்த மேக்னாராஜூக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா என்று பெயர் சூட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது முழு கவனத்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த மேக்னாராஜ், தற்போது தான் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் மேக்னாராஜ் தனது திருமண நாளை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான ஒரு பதிவை செய்துள்ளார். அதில் ’எனது மகனுக்கும் எனக்கும் அவர் சரியானதை செய்ய அவருக்கு கடவுளின் வழிகாட்டுதல் தேவை என்று எனக்கு தெரியும், அதனால் தான் நான் கடவுளை மன்னிக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த உருக்கமான பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

குழந்தையுடன் பிகினி உடை: பீச்சில் ஆட்டம் போடும் நடிகை ஸ்ரேயா வீடியோ வைரல்

நடிகை ஸ்ரேயா சரண் தனது குழந்தையுடன் கோவா பீச்சில் பிகினி உடையில் ஆட்டம்போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

சூர்யாவின் 'ஜெய்பீம்': தாதா சாகேப் பால்கே விருதுகளை அடுத்து மேலும் 2 விருதுகள்!

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்கப்பட்டன என்பதும் சிறந்த படம் மற்றும் சிறந்த துணை நடிகர் விருது

பிறந்த நாளில் மேக்கப் இல்லாமல் ஷிவானி செய்த வேலை என்ன தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இன்று தமிழ் திரையுலகில் பிஸியாக இருந்து வரும் நடிகை ஷிவானி நாராயணன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பிறந்தநாளில் மேக்கப் இல்லாமல் அவர் செய்த

நடிகர் விமல் மீது மோசடி புகார்: தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைதில் திடீர் திருப்பம்

விமல் நடித்த 'மன்னார் வகையறா பட பண மோசடி விவகாரத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற கோவிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா: வைரல் புகைப்படம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் என்பதும் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில்