close
Choose your channels

பிறந்த நாளில் மேக்கப் இல்லாமல் ஷிவானி செய்த வேலை என்ன தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!

Thursday, May 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இன்று தமிழ் திரையுலகில் பிஸியாக இருந்து வரும் நடிகை ஷிவானி நாராயணன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பிறந்தநாளில் மேக்கப் இல்லாமல் அவர் செய்த செயல் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஷிவானி நாராயணன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

இந்த நிலையில் இன்று பிறந்த நாளின் போது அவர் பாடி சிவன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். மேலும் அவர் மேக்கப் இல்லாமல் கோவிலுக்கு சென்றதாகவும் தெரிவித்து இது குறித்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார். மேலும் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் கமல்ஹாசனின் ’விக்ரம்’ பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், ஆர்ஜே பாலாஜி திரைப்படம், ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.