திடீரென காவல்துறையில் புகார் அளித்த நடிகை நிரோஷா.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,September 06 2023]

நடிகை நிரோஷா திடீரென தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது வீட்டில் திருடு போய்விட்டதாக புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் நகைகள் திருட்டு போனதாக புகார் அளித்தார். விசாரணையில் அவர் வீட்டில் வேலை செய்த பெண் தான் திருடினார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து நடிகை ஷோபனா தனது வீட்டில் திருட்டு போனதாக புகார் அளித்தார். இவரது வீட்டிலும் வேலை செய்தவர் தான் திருடியது தெரியவந்தது.

இந்த நிலையில் தற்போது ராதிகாவின் தங்கையும் நடிகர் ராம்கியின் மனைவியுமான நடிகை நிரோஷா தனது குடும்பத்துடன் தேனாம்பேட்டையில் உள்ள ஜெமினி பார்சன் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வசித்து வரும் நிலையில் தனது வீட்டில் இருந்த சொத்து ஆவணங்கள் திருடு போய்விட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

3 நாடுகளில் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு.. பக்கா பிளானுடன் களமிறங்கும் மகிழ் திருமேனி..!

அஜித் நடிக்க இருக்கும் 'விடாமுயற்சி' என்ற திரைப்படத்தின் அறிவிப்பை லைகா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த செய்தி வராததால்

நடிகை ரம்யா குறித்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி.. நெருக்கமானவர் தகவல்..!

சிம்பு நடித்த  'குத்து' தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா திடீரென்று காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஒரே ஒரு மனுஷன்.. ஒரே ஒரு பாபா ரஜினி சார்.. 'ஜெயிலர்' வில்லன் விநாயகன் பேட்டி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் சுமார் 600 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

கங்கனா ஒரிஜினல் சந்திரமுகி.. ஆனால் ஜோதிகா அப்படியில்லை.. ராகவா லாரன்ஸ்..!

'சந்திரமுகி 2' படத்தில் கங்கனா ஒரிஜினல் சந்திரமுகி கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் ஆனால் சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா சந்திரமுகியாக தன்னை நினைத்துக் கொண்டு  நடித்திருந்தார் என்று ராகவா லாரன்ஸ்

இந்தியாவை பாரத் என அழைக்க வேண்டும் என 3 வருடங்களுக்கு முன்பே சொன்னேன்: 'சந்திரமுகி 2' நடிகை..!

இந்தியாவை பாரத் என அழைக்க வேண்டும் என மூன்று வருடங்களுக்கு முன்பே நான் கூறியிருக்கிறேன் என்று 'சந்திரமுகி 2' படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் கூறியிருக்கிறார்.