8 மணி நேரம் டிரெண்டிங்கில் இருந்த நடிகையின் பிறந்தநாள் ஹேஷ்டேக்: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Wednesday,August 18 2021]

பிரபல நடிகை ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த ஹாஷ்டேக் சமூகவலைதளங்களில் 8 மணி நேரம் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்தது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பிரபல நடிகை காஜல் அகர்வாலின் சகோதரியும் ’இஷ்டம்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவருமான நடிகை நிஷா அகர்வால் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். பொதுவாக நடிகைகள் தங்கள் தோழிகள், உறவினர்களுடன் ஸ்டார் ஹோட்டலில் பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் நடிகை நிஷா அகர்வால் வித்தியாசமாக முதியோர் இல்லத்தில் பிறந்த நாளை கொண்டாடினார்.

முதியோர் இல்லத்தில் உள்ள வயதான, ஆதரவற்ற பெண்களுக்கு அவரே உணவு பரிமாறி அவர்களுடைய மத்தியில் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் #NationalCrushNidhhi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் சுமார் 8 மணி நேரம் ட்ரெண்டிங்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நிஷா அகர்வால் மும்பை தொழிலதிபர் கரண் என்பவரை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்பதும் 2018ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு மகன் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': ஷாப்பிங் மால் காட்சி இதுதானா?

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்திற்காக பிரமாண்டமான ஷாப்பிங் மால் செட் போடப்பட்டு அதில் சில நாட்கள்

மாரியப்பன் தங்கவேலின் ஆசையைக் கேட்டறிந்த பிரதமர் மோடி… வைரலாகும் உரையாடல்!

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசில் தலைநகர் ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம்தாண்டும்

ரஜினி, அஜித்தை அடுத்து தீபாவளி தினத்தில் 'பீஸ்ட்': விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' மற்றும் தல அஜித் நடித்து வரும் 'வலிமை' ஆகிய இரண்டு திரைப்படங்கள் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் மீண்டும் ரஜினி, அஜித் படங்கள் மோத

நயன்தாராவை அடுத்து அட்லி-ஷாருக்கான் திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை!

ஷாருக்கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின்

ரஜினியை அடுத்து விஜய்: இளம் இயக்குனர் காட்டில் மழை!

ஒரே ஒரு படம் மட்டுமே இயக்கிய இளம் இயக்குனர் ஒருவருக்கு ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவரது படங்களையும் அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக வெளிவந்திருக்கும்