close
Choose your channels

ஃபார்முலா ஒன் கார் பயிற்சி சான்றிதழ் வாங்கிய தமிழ் நடிகை!

Monday, July 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகை ஒருவர் பார்முலா ஒன் கார் பயிற்சி சான்றிதழ் வாங்கி உள்ள தகவல் தற்போது புகைப்படங்களுடன் வைரலாகி வருகிறது

’ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன்பிறகு ’டிக் டிக் டிக்’ ’சங்கத்தமிழன்’ ’பொன்மாணிக்கவேல்’ ’பார்ட்டி’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ்

இவர் சமீபத்தில் ஃபார்முலா ஒன் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதும் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது பார்முலா கார் ரேஸ் பயிற்சியில் முதல்நிலையை அவர் வெற்றிகரமாக முடித்து உள்ளதாக அவருக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நடிகை ஒருவர் பார்முலா ஒன் கார் ரேஸ் கார் ரேஸ் பயிற்சி முடித்துள்ள தகவல் கோலிவுட் திரையுலகிலகினர் மத்தியில் பெருமைக்குரியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.