திடீரென அரசியலில் குதித்த பிரபல நடிகை: தேடி வந்தது துணைத்தலைவர் பதவி!

  • IndiaGlitz, [Monday,October 26 2020]

பிரபல நடிகை ஒருவர் அரசியலில் இணைந்தவுடன் அவருக்கு கட்சியின் மகளிர் அணி துணைத் தலைவர் பதவி தேடி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது திடீரென பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தவர் நடிகை பாயல் கோஷ் என்பது தெரிந்ததே அவருடைய குற்றச்சாட்டை அனுராக் காஷ்யப் மறுத்திருந்தார் என்பதும் அவருக்கு ஆதரவாக அவருடைய முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாயல் கோஷ் திடீரென இன்று இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்தார்

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்களின் கட்சியான இந்த கட்சியில் அவருக்கு மகளிர் அணி துணைத் தலைவர் பதவி தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை பாயல் கோஷ் அரசியல் கட்சியில் திடீரென இணைந்திருப்பது மட்டுமின்றி அக்கட்சியின் முக்கிய பதவியையும் பெற்று இருப்பது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

சாக்சி தோனியின் அன்பு முத்தத்தை பெற்ற சிஎஸ்கேவின் இளம் வீரர்!

நேற்று பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடிய சிஎஸ்கே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பதும் இந்த போட்டியில் விளையாடிய இளம் வீரர் ருத்ராஜ்

உலகத்திலேயே முதல் முறையாக சரக்கு பாட்டிலுக்கும் ஆயுதப் பூஜை…

மனித நாகரிகத்திற்கு அடிப்படையாக அமைந்த ஒன்று சக்கரத்தின் கண்டுபிடிப்பு.

நீர் சறுக்கல்… கடல் அலைகளை எதிர்த்து சாதனைப் படைத்து வரும் சென்னை வீராங்கனை!!!

இனப்பாகுபாடு என்பது உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு நிகழும் சாதாரண நிகழ்வாகவே இருந்து வருகிறது.

கையில் சாட்டையை சுழற்றிய கார்த்தி: வைரலாகும் 'சுல்தான்' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'சுல்தான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் டப்பிங் பணிகளும் சமீபத்தில் தொடங்கியது

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த தாமரைப்பூ… அப்படி என்ன ஸ்பெஷல்?

உலகச் சாதனையை அங்கீகரிக்கும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் தாமரை பூ வடிவிலான மோதிரம் ஒன்று இடம் பெற்றிருக்கிறது.