குளியலறையில் என்னை கட்டிப்பிடித்த நடிகர்: நடிகையின் மீடூ குற்றச்சாட்டு

  • IndiaGlitz, [Wednesday,October 31 2018]

குளியல் அறையில் எனது அப்பா வயதுள்ள நடிகர் ஒருவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாக நடிகை பிரெர்னா கண்ணா திடுக்கிடும் மீடூ குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

‘ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த பிரெர்னா கண்ணா தமிழில் 'வேறென்ன வேண்டும்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை பிரெர்னா கண்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, 'எனது அப்பா வயதில் இருக்கும் நடிகர் ஒருவர் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் தருவதாகவும் கூறி என்னை 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு வரச்சொன்னார்.

நான் அவர் கூறியபடி அந்த ஓட்டலுக்கு சென்றபோது என்னுடைய ஐலைனரை அவர் அழிக்க சொன்னதால் நான் குளியலறைக்கு சென்று அதனை அழித்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென என் பின்னால் குளியலறைக்கு வந்த அந்த நடிகர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரை தள்ளிவிட்டுவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன். அவருக்கும் என் வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் அவருடைய நடவடிக்கை எனக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் வரவழைத்தது என்று அந்த பேட்டியில் நடிகை பிரெர்னா கண்ணா
 

More News

சிவகார்த்திகேயன் - நயன்தாரா படம் குறித்த முக்கிய தகவல்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் 'சீமராஜா' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

செருப்பால் அடித்து கொண்ட இரண்டு மனைவிகள்: தலைமறைவான பிரபல நடிகர்

பிரபல கன்னட நடிகர் ஒருவரின் இரண்டு மனைவிகள் ஒருவருக்கொருவர் செருப்பால் அடித்து கொண்டு தாக்கிய நிலையில் அந்த நடிகர் திடீரென தலைமறைவாகியுள்ளார்.

நடிகர் ஆனந்த்ராஜூக்கு ஏற்பட்ட பேரிழப்பு

தமிழ் சினிமாவின் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான ஆனந்த்ராஜின் தாயார் ராஜாமணி புதுச்சேரியில் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. 

சர்தார் பட்டேல் சிலை: ரூ.3000 கோடி வீணா?

உலகின் மிக உயர்ந்த சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை குஜராத்தில் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.

மாரி 2: முக்கிய பணியை முடித்த வில்லன் டொவினோ தாமஸ்

தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து