போதைப்பொருள் விவகாரம்: பிரபல தமிழ் நடிகை கைது

  • IndiaGlitz, [Friday,September 04 2020]

கன்னட திரையுலகில் கடந்த சில நாட்களாக போதைபொருள் விவகாரம் விசுவரூபம் எடுத்து வருகிறது என்பது தெரிந்ததே. கடந்த சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சி நடிகை ஒருவர் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டதாகவும், இதனை அடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரை உலகில் உள்ள பல நட்சத்திரங்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்தது தெரிய வந்ததாகவும் கூறப்பட்டது

மேலும் இது குறித்து ஜெயம் ரவியின் ’நிமிர்ந்து நில்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை ராகினி திவேதியையும் போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்தனர். இது குறித்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், அவரது சார்பில் அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்தில் ஆஜரானதாகவும் தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகினி திவேதியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சற்றுமுன் கைது செய்தனர். அவரது வீட்டிற்கே சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரது வீட்டை சோதனை செய்ததாகவும், சோதனையைத் தொடர்ந்து ராகினி திவேதி கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

போதை பொருள் விவகாரத்தில் தமிழ் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

முழுக்க முழுக்க வதந்தி, யாரும் நம்பாதீங்க.... கீர்த்தி சுரேஷ் விளக்கம்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த'

நவம்பரில் அரசியல் கட்சி: உறுதி செய்யப்பட்ட தகவலால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளிவந்த போதிலும், கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிதான் அவர் ரசிகர்கள் முன்னிலையில் அரசியலில் குதிக்க இருப்பதை

கொரோனா உறுதி செய்யப்பட்டது தெரியாமலே முதியவரின் உடலுக்கு இறுதிசடங்கு செய்த உறவினர்கள்!!!

சென்னை அடுத்த மணிலியில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட விஷயம்

வாகனங்களில் தனியாகச் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டுமா???  சுகாதாரத்துறை விளக்கம்!!!

கார், இருசக்கரம், சைக்கிள் போன்ற வாகனங்களில் தனியாகச் செல்வோர் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லவேண்டுமா என்ற கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷான் விளக்கம் அளித்து உள்ளார்.

10 வருடங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கிய விஷ்ணுவிஷால் பட இயக்குனர்

விஷ்ணு விஷால், ரம்யா நம்பீசன் நடித்த 'குள்ளநரி கூட்டம்' படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி என்பவர் பத்து வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.