சிம்பு-தனுஷ் நாயகிக்கு புதிய பதவி கொடுத்த ராகுல்காந்தி

  • IndiaGlitz, [Wednesday,October 11 2017]

நடிகர் சிம்புவுடன் 'குத்து' மற்றும் தனுஷுடன் 'பொல்லாதவன் உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும், கன்னட, தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி, முழுநேர அரசியலில் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக தலைவராக நடிகை ரம்யாவை நியமனம் செய்துள்ளார். இந்த பதவியில் இதற்கு முன்னர் அரியானா முன்னாள் முதல்வர் புபேந்தர் சிங் ஹூடாவின் மகன் தீபந்தர் சிங் ஹூடா இருந்த வந்த நிலையில் தற்போது அவர் நீக்கப்பட்டு அந்த பதவியை ரம்யாவிடம் அளித்துள்ளார் ராகுல் காந்தி.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் பாஜகவின் அதிரடிகளை சமூக ஊடகங்கள் மூலம் சமாளிக்கவே ரம்யா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

சியான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' ரிலீஸ் எப்போது?

சியான் விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கி வரும் 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. 

ஒரு தளபதி உருவாக எத்தனை வருசம்? பிரபல கவிஞரின் மகன்

'ஒரு குழந்தை உருவாகறதுக்கு பத்து மாதம், ஒரு பட்டதாரி உருவாகறதுக்கு மூணு வருஷம், ஆனால் ஒரு தலைவன் உருவாகறதுக்கு ஒரு யுகமே தேவைப்படுது'

டாக்டர் கேரக்டரில் முதன்முதலாக த்ரிஷா

தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, தற்போதைய இளம் நடிகைகளுக்கு இணையாக ஒரே நேரத்தில் 6 தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார்.

2.0 எமிஜாக்சனின் புதிய போஸ்டரை ரிலீஸ் செய்த ஷங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மீதமிருக்கும்

'மெர்சலை அடுத்து டுவிட்டர் இமோஜியை பெறும் 2 படங்கள்

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் பெயரில் டுவிட்டர் இமோஜி பெற்ற ஒரே படம் என்ற பெருமையை தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.