close
Choose your channels

வெள்ளை நிறமே.. வெள்ளை நிறமே.. திடீரென கிளாமரை மறந்த ரம்யா பாண்டியன்..!

Saturday, February 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் திடீரென வெள்ளை நிறத்தில் துளியும் கிளாமர் இன்றி சேலை காஸ்டியூமில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் லைக்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் அள்ளி குவித்து வருகிறது.

தமிழ் திரைப்பட நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கிளாமரான புகைப்படங்களை அவ்வபோது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து தனது பாலோயர்களை திருப்தி செய்த ரம்யா பாண்டியன் தற்போது வெள்ளை நிறத்தில் சேலை மற்றும் பிளவுஸ் காஸ்டியூம் அணிந்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். துளி கூட கிளாமர் இல்லாமல் இருக்கும் இந்த போட்டோஷூட் புகைப்படங்களையும் ரசிகர்கள் லைக்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவில் கேப்ஷனாக அவர் பதிவு செய்திருப்பதாவது:

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
விழியில் பாதி உந்தன் நிறமே
மழையில் முளையும் தும்பி நிறமே

இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் மம்முட்டி உடன் நடித்த ’நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அவர் ’இடும்பன்காரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.