close
Choose your channels

நாற்காலியில் வேற லெவலில் யோகா செய்யும் ரம்யா பாண்டியன்.. வைரல் வீடியோ..!

Thursday, April 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாற்காலியில் வேற லெவலில் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் நடிகைகளின் ஒருவர் ரம்யா பாண்டியன் என்பதும் இவர் ’குக் வித் கோமாளி’ மற்றும் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ள ரம்யா பாண்டியன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து தனது ஃபாலோயர்களை திருப்தி செய்து வருகிறார்.

இந்த நிலையில் யோகா மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ரம்யா பாண்டியன் தற்போது நாற்காலியில் தலைகீழாக நின்று யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

ஒரு வருடம் முன்பு நான் இப்போது செய்வதில் பாதியைச் செய்திருக்க முடியாது. நாற்காலி யோகாவில் நான் எனது கை வலிமை, சமநிலை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறேன். எனது கடினமான கீழ் முதுகு 50% வளைகிறது. இந்த யோகாவில் நான் சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கொண்டாடுகிறேன். நான் யோகாவில் உண்மையான சக்தி இருப்பதை நம்புகிறேன். சரியான பயிற்சியுடன் யோகா செய்தால் உண்மையான பலன் கிடைக்கும்’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.