விஜய் மக்கள் இயக்கம் குறித்த டிவி விவாதம்.. வரமுடியாது என்று சொன்ன நடிகை..!

  • IndiaGlitz, [Tuesday,April 18 2023]

விஜய் மக்கள் இயக்கம் குறித்த டிவி விவாதத்திற்கு தனக்கு அழைப்பு வந்ததாகவும் ஆனால் தான் வர முடியாது என்று கூறிவிட்டதாகவும் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக விஜய் மக்கள் இயக்கம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 14ஆம் தேதி அன்று அம்பேத்கர் பிறந்தநாளில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் நேற்று தீரன் சின்னமலை சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சமீப கால நடவடிக்கைகள் குறித்து பிரபல தொலைக்காட்சி விவாதம் நடத்தியது. இந்த விவாதத்திற்கு தனக்கு அழைப்பு வந்ததாகவும் ஆனால் தான் வர முடியாது என்று கூறிவிட்டதாகவும் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியதாவது:

இன்று இன்னொரு அழைப்பு - மாலை நாளிதழ் குழுமத்தின் டிவி. விஜய் மக்கள் இயக்கத்தினர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலையிட்டனர், அதை சாக்காக வைத்து விஜய் பற்றி விவாதிக்கலாம் என்று ... ஐயையே என்னங்க இது நாட்டுல என்னவெல்லாமோ நடக்கும் போது என்று என்னையுமறியாமல் சொல்லி விட்டேன். பாவம் அழைத்தவருக்கு என்னவோ போலாகி விட்டது. எந்த டிவி என்று 8 மணிக்கு பாத்து தெரிஞ்சுக்குங்க !

More News

இளம் ஹீரோவுடன் இணைந்த சரத்குமார்.. டைட்டில் போஸ்டர் வீடியோ ரிலீஸ்..!

பிரபல நடிகர் சரத்குமார் ஏற்கனவே ஒரு சில இளம் ஹீரோக்கள் மற்றும் மாஸ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் விஜய்யின் 'வாரிசு' , ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' ஆகிய திரைப்படங்களில்

காதலரை அறிவிக்கும் முன் கர்ப்பத்தை அறிவித்த இலியானா. ரசிகர்கள் குழப்பம்..!

நடிகை இலியானாவுக்கு அதிகாரப்பூர்வமாக திருமணம் நடந்ததாக இதுவரை செய்தி வெளியாகாத நிலையில் அவர் தனது கர்ப்பத்தை அறிவித்துள்ளது அடுத்து ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 

ஆப்பிள் சிஇஓ டிம் குக் உடன் ரஜினிகாந்த் மகள்.. வைரல் புகைப்படங்கள்..!

ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

சரத்குமார் பட நாயகியா இவர்? 42 வயதிலும் பிகினியில் கிளாமர் போஸ்..!

சரத்குமார் படத்தில் நாயகியாக நடித்த நடிகை 42 வயதில் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

'வாரிசை அடுத்து மீண்டும் தெலுங்கு பட இயக்குனரா? விஜய்க்கு கதை சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார் என்பதும் இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.