close
Choose your channels

விஜய் மக்கள் இயக்கம் குறித்த டிவி விவாதம்.. வரமுடியாது என்று சொன்ன நடிகை..!

Tuesday, April 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மக்கள் இயக்கம் குறித்த டிவி விவாதத்திற்கு தனக்கு அழைப்பு வந்ததாகவும் ஆனால் தான் வர முடியாது என்று கூறிவிட்டதாகவும் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக விஜய் மக்கள் இயக்கம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 14ஆம் தேதி அன்று அம்பேத்கர் பிறந்தநாளில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் நேற்று தீரன் சின்னமலை சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சமீப கால நடவடிக்கைகள் குறித்து பிரபல தொலைக்காட்சி விவாதம் நடத்தியது. இந்த விவாதத்திற்கு தனக்கு அழைப்பு வந்ததாகவும் ஆனால் தான் வர முடியாது என்று கூறிவிட்டதாகவும் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியதாவது:

இன்று இன்னொரு அழைப்பு - மாலை நாளிதழ் குழுமத்தின் டிவி. விஜய் மக்கள் இயக்கத்தினர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலையிட்டனர், அதை சாக்காக வைத்து விஜய் பற்றி விவாதிக்கலாம் என்று ... " ஐயையே என்னங்க இது நாட்டுல என்னவெல்லாமோ நடக்கும் போது " என்று என்னையுமறியாமல் சொல்லி விட்டேன். பாவம் அழைத்தவருக்கு என்னவோ போலாகி விட்டது. எந்த டிவி என்று 8 மணிக்கு பாத்து தெரிஞ்சுக்குங்க !

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos