ரஜினியின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தது இந்த நடிகையின் மகளா?

  • IndiaGlitz, [Saturday,June 12 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2002ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்தபோது பிரபல நடிகை ஒருவரின் மகள் தான் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்ததாக அந்த நடிகை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 2002ஆம் ஆண்டு தமிழ் திரையுலகினர் கர்நாடக மாநிலம் காவிரி தண்ணீரை திறந்துவிட மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது மணி நேரம் நடந்த இந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தபோது ஒரு சிறு குழந்தை ரஜினிக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தது. அந்தக் குழந்தைதான் நடிகை ரேகாவின் குழந்தை என்பது தற்போது தெரியவந்துள்ளது

பாரதிராஜாவின் ‘கடலோர கவிதைகள்’ படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல திரைப்படங்களில் நடித்த நடிகை ரேகா, ‘குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் பிக்பாஸ் சீசன் 4 ஆகியவற்றில் கலந்துகொண்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள நடிகை ரேகா, ’இந்த புகைப்படம் தனக்கு மலரும் நினைவுகளை ஏற்படுத்திவிட்டது, தனது குழந்தை ரஜினியால் ஆசிர்வதிக்கப்பட்டார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

ஆர்யா தயாரித்து, நடிக்கும் படத்தை இயக்கும் விருது பெற்ற இயக்குனர்!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சார்பாட்டா பரம்பரை' விரைவில் ரிலீசாக உள்ளது.

டாஸ்மாக்-கை இதற்காகத் தான் திறக்கிறோம்....! ஸ்டாலின் கூறிய பதில்....!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை இதற்காகத் தான் திறக்கிறோம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் விளக்கம் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த பிரபலங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

தமிழகத்தில் பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து அமைச்சர் கூறிய முக்கியத் தகவல்!

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் படிப்புக்கு சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

அவதூறு தொடர்பான வழக்கில் நடிகை காயத்ரி ரகுராமுக்கு சம்மன்!

அவதூறு தொடர்பான வழக்கில் நடிகை காயத்ரி ரகுராமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்ப சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.