நடிகை சாய்பல்லவிக்கு திருமணமா? அவரே அளித்த விளக்கம்!

  • IndiaGlitz, [Sunday,May 01 2022]

நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் என்றும் அதனால் தான் அவர் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் சமூக வலைதளங்கள் மற்றும் ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து சாய்பல்லவி விளக்கம் அளித்துள்ளார்.

’பிரேமம்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் மலர் என்ற மனதை கவர்ந்த கேரக்டரில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அதன் பின்னர் அவர் தமிழில் ’தியா’ ’மாரி 2’ ‘என்ஜிகே’ உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் தெலுங்கில் பல படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பிஸியாக இருந்த சாய்பல்லவி தற்போது திடீரென படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டதாகவும், அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் வதந்திகள் பரவின. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை சாய் பல்லவி, ‘ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல ஒரு இமேஜ் உள்ளது என்றும், சாய் பல்லவி என்றால் திருப்திகரமான கேரக்டரில் நடிப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும், அதனால் நல்ல கதைக்காக காத்து கொண்டிருக்கின்றேன் என்றும், அதனால்தான் அதிக படங்களில் ஒத்துக்கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதை வைத்து திருமணத்துக்கு தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாவதில் எந்த உண்மையும் இல்லை என்று அவர் கூறி உள்ளார். இதனை அடுத்து சாய்பல்லவிக்கு இப்போதைக்கு திருமணம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

More News

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித்-விஜய்: பிரபல இயக்குனர் திட்டம்!

 அஜித் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் இணைத்து நடிக்கவைக்க ஆசைப்படுவதாக பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அதிமுக பிரமுகர்கள்!

அஜித்தின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

'காத்துவாக்குல ரெண்டு காதல்': ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா!

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான

நடிகர் விவேக் மனைவி கோரிக்கை நிறைவேற்றம்: தமிழக அரசின் அரசாணை

சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்த மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி கோரிக்கை ஒன்றை அளித்த நிலையில் அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்

உழைப்பாளர் தினத்தில் உதித்த உழைப்பாளி: அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள்!

உழைப்பாளர் தினத்தில் உதித்த உழைப்பாளி: அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள்!