close
Choose your channels

அட்லியின் 'ஜவான்' டீசரை பார்த்து சமந்தா என்ன சொன்னார் தெரியுமா?

Saturday, June 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலானது என்பதை பார்த்தோம். இந்த படத்தின் டீசரை பார்த்து அட்லி மற்றும் ஷாருக்கானுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றோம் என்றும் பலர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் அட்லியின் ’தெறி’ மற்றும் ’மெர்சல்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்த நடிகை சமந்தா, தனது சமூக வலைத்தளத்தில் ‘ஜவான்’ டீசர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

‘ஜவான்’ டீசர் பயங்கரம் என்றும், அட்லியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்’ என்றும் சமந்தா கூறியுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. முதலில் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் ஜோடியாக சமந்தா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் சமந்தாவுக்கு பதிலாக நயன்தாரா இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment