திருமணநாளை குதூகலமாகக் கொண்டாடும் சூர்யா, அஜித் பட நடிகை… வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,January 21 2022]

தமிழ் சினிமாவில் போல்டான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய 8 ஆவது திருமணநாளை இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடிவருகிறார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவந்த நடிகை சமீரா ரெட்டி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம்“ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதையடுத்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “அசல்“ படத்தில் வேறலெவல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தொடர்ந்து “நடுநிசிநாய்கள்“, “வெடி“, “வேட்டை“ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த அக்சய் குமார் வர்தே என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்தத் தம்பதிகளுக்குத் தற்போது ஒரு மகனும் மகளும் உள்ளனர். மேலும் சமூகவலைத்தளப் பக்கங்களில் எப்போதும் பிசியாக இயங்கிவரும் நடிகை சமீரா வொர்க் அவுட், ஆரோக்கியம் குறித்த விஷயங்களையும் குழந்தை வளர்ப்பு குறித்த விஷயங்களையும் தொடர்ந்து அதில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது 8 ஆவது திருமண நாளை குதூகலமாகக் கொண்டாடிவரும் நடிகை சமீரா ரெட்டி தனது கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட க்யூட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வைரலாகி வருகிறது.

More News

பாத் டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தமிழ் நடிகை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா

தமிழத்தில் மீண்டும் ரிலீஸாகும் 'புஷ்பா': காரணம் இதுதான்!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது

செல்வராகவன் - கீர்த்தி சுரேஷின் 'சாணிக்காகிதம்' ரிலீஸ் எப்போது?

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'சாணிக்காகிதம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி இதுவா?

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாக்கிய திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்' என்பதும் இந்த படம் கடந்த 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய

செல்வராகவன் வீட்டிலும் புகுந்த ஒமிக்ரான் வைரஸ்: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து முழு நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு