close
Choose your channels

பாக்சிங் கற்றுக்கொள்ளும் சூர்யா பட நடிகை… வெறித்தனமான பஞ்ச் வீடியோ வைரல்!

Tuesday, August 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “வாரணம் ஆயிரம்” இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அடுத்து தல அஜித் நடிப்பில் வெளியான “அசல்“, நடிகர் விஷாலுடன் “வெடி” மற்றும் “வேட்டை“, “நடுநிசி நாய்கள்” போன்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். தமிழைத் தவிர தெலுங்கு, இந்தியிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சமீரா கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே எனும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது இந்த ஜோடிக்கு ஹான்ஸ் எனும் ஆண் குழந்தையும் நைரா எனும் பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது சினிமாவை விட்டு விலகிவிட்ட நடிகை சமீரா முழுநேரமும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருவதோடு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இதையடுத்து நடிகை சமீரா ரெட்டி சமீபத்தில் பாக்சிங் கற்றுக்கொள்வதைப் போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். நடிகைகள் சிலர் கொரோனா நேரத்தில் பாக்சிங், யோகா கற்றுக்கொள்வது எனப் பல்வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா பாக்சிங் கற்றுக்கொள்வது போன்ற வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதேபோல நடிகை ஸ்ருதிஹாசனும் பாக்சிங் கற்றுக் கொள்வதைப் போன்ற வீடியோவை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது நடிகை சமீரா பாக்சிங் கற்றுக்கொள்ளும் வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.