close
Choose your channels

நீச்சல் குளத்திற்குள் நிறைமாத கர்ப்பிணி: சமீரா ரெட்டியின் வேற லெவல் புகைப்படங்கள்!

Thursday, August 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமீரா ரெட்டி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது நீச்சல் குளத்திற்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யா நடித்த ’வாரணம் ஆயிரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சமீராரெட்டி, அதன் பின்னர் அஜித் நடித்த ’ஆசை’ விஷால் நடித்த ’ வெடி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்ட சமீரா ரெட்டிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார் என்பதும் தற்போது அவர் திரையுலகில் இருந்து விலகி முழுக்க முழுக்க குடும்பத்தை கவனித்து வரும் பொறுப்பில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது நீச்சல் குளத்திற்குள் எடுத்த புகைப்படங்களை வீடியோவாக தொகுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீரா ரெட்டி பகிர்ந்துள்ளார். வேற லெவலில் இருக்கும் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.