பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம்ஷெட்டியும் இல்லையா? பரபரப்பு தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் போட்டியாளரா? என நடிகை சனம் ஷெட்டி பேட்டி எடுத்தவரையே திருப்பிக் கேள்வி வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம்ஷெட்டியும் இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த இறுதி பட்டியல் கிட்டத்தட்ட வெளியாகி விட்ட நிலையில் அந்த பட்டியலில் ஆரம்பத்தில் இருந்தவர் நடிகை சனம்ஷெட்டி. இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் அவரை பேட்டி எடுத்தபோது, ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்கிறீர்கள் என நான் கேள்விப்பட்டேன், அது உண்மையா? என கேட்க அதற்கு சனம் ஷெட்டி ‘நானும் கேள்விப்பட்டேன்’ என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஆர்ஜே அர்ச்சனா, கிரண் ரத்தோட் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்ட நிலையில் அந்த பட்டியலில் சனம்ஷெட்டியுமா? என பிக்பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் 14 போட்டிகளில் முதல் கட்டமாகவும் 3 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாகவும் அதில் சனம்ஷெட்டி வைல்ட்கார்ட் போட்டியாளராக கலந்து கொள்ளவிருப்பதாகவும் விஜய்டிவி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

More News

இயக்குனர் அவதாரம் எடுத்து அஜித் பட தயாரிப்பாளர்: அனிருத் வாழ்த்து

அஜீத் நடித்த 'மங்காத்தா' உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாநிதி அழகிரி என்பதும் இவர் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களின் பேரன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன்

எலிமினேஷன் யாருன்னு இனிமே வெளியே கசியாது: பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டே நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சி குறித்த பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

அவமானத்தில் அனைவரும் தலையை தொங்கவிட வேண்டும்: விஜய் நாயகி ஆவேசம்

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹாத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

'சூரரை போற்று': அசத்தலான இரண்டு புதிய அப்டேட்டுக்கள்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள 'சூரரை போற்று' திரைப்படம் இம்மாதம் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

3 மாத குழந்தையை பாட வைத்த பிக்பாஸ் பிரபலம்

தனது மூன்று மாத குழந்தையை பாடவைத்த பிக்பாஸ் பிரபலம் மற்றும் பாடகியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது