close
Choose your channels

3 மாத குழந்தையை பாட வைத்த பிக்பாஸ் பிரபலம்

Friday, October 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது மூன்று மாத குழந்தையை பாடவைத்த பிக்பாஸ் பிரபலம் மற்றும் பாடகியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாடகி ரம்யா. இவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் என்எஸ் கிருஷ்ணனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் இவருக்கு குழந்தை பிறந்தது என்பது குறித்த செய்தியைப் பார்த்தோம். தற்போது அந்த குழந்தை பிறந்து மூன்று மாதமே ஆகியுள்ள நிலையில் பாடகி ரம்யா, தனது குழந்தையுடன் கூடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ரம்யா ஒரு பாடகி என்பதால் தனது மூன்று மாத குழந்தைக்கு பாடல் பாட சொல்லிக் கொடுப்பது போலவும் அந்த குழந்தையும் ஆர்வத்துடன் மழலை மொழியில் பாட முயற்சிப்பது போன்றதுமான காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. மூன்று மாத குழந்தையை பாட வைத்த அதிசயமான இந்த வீடியோவை அவரது பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.