காங்கிரஸில் இணைந்த பிக்பாஸ் டைட்டில் வென்ற நடிகை

  • IndiaGlitz, [Wednesday,February 06 2019]

பிக்பாஸ் இந்தி சீசன் 11 டைட்டில் வின்னரும் பிரபல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகையுமான ஷில்பா ஷிண்டே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளிலும் திரையுலக பிரபலங்கள் இணைந்து வரும் நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் அக்கட்சியின் மும்பையில் நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் முன்னிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷிண்டே தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இணைந்த பின்னர் நடிகை ஷில்பா ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறியபோது, 'பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நாட்டை செய்துள்ளது. இதனால் இந்த கட்சியில் சேர முடிவு செய்தேன். தற்போது நமக்கு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கொண்டு வர முடியும் என நம்புகிறேன்.

நாட்டின் அடுத்த பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும் காங்கிரஸ் கட்சியில் ஜாதி, மதம் பார்ப்பதில்லை என்று ஷில்பா கூறியுள்ளார்.

More News

இணையத்தில் வைரலாகும் செருப்பு செல்பி! திரை நட்சத்திரங்கள் பாராட்டு

கடந்த சில நாட்களுக்கு முன் சமூக இணையதளத்தில் ஒரு புகைப்படம் பதிவாகி மிகக்குறுகிய நேரத்தில் நாடு முழுவதும் வைரலானது. இந்த புகைப்படத்தில் ஒரு சிறுவன் தன் கையில் செருப்பை மாட்டிக் கொண்டு

தொழிலதிபரான மகளுக்கு வாழ்த்து தெரிவித்த குஷ்பு

நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி போன்றவற்றில் குஷ்புவும், அவரது கணவர் சுந்தர் சி திரைப்படங்கள் இயக்குவதிலும் பிசியாக இருந்து வரும் நிலையில் சுந்தர் சி-குஷ்பு தம்பதியின் மூத்த மகள் அனந்திட்டா

21 வயது தொலைக்காட்சி நடிகை தற்கொலை: காதல் தோல்வியா?

நடிகைகள், குறிப்பாக தொலைக்காட்சி நடிகைகளின் தற்கொலை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. இந்த தற்கொலைகளுக்கு மன அழுத்தம் மற்றும் காதல் தோல்வியே பெரும்பாலும் காரணமாக உள்ளது

திருநாவுக்கரசருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசரின் பதவி சமீபத்தில் பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

சென்னை காவல்துறை ஆணையருடன் விஜய்சேதுபதி சந்திப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பது மட்டுமின்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தரும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருவது தெரிந்ததே. ஒரு தனியார் தொலைக்காட்சியில்