துபாய் தொழிலதிபரை திருமணம் செய்யும் தமிழ் நடிகை.. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,January 10 2024]

தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ள நிலையில் திருமணம் நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்கள் நடிகையின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிரின் காஞ்ச்வாலா. இவர் தற்போது அமீர் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் விமல் மற்றும் புகழ் ஆகியோர்களுடன் இரண்டு படங்கள் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஷிரின் காஞ்ச்வாலா, துபாய் தொழிலதிபர் அசார் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் நட்புடன் பழகிய நிலையில் அந்த நட்பு தற்போது காதலாக மாறி விட்டதாகவும், தனது நெருங்கிய உறவினரின் நண்பர் தான் அசார் என்றும் ஷிரின் காஞ்ச்வாலா தெரிவித்துள்ளார்.

தனது நிச்சயதார்த்தம் 5ஆம் தேதி மும்பையில் ஷிரின் காஞ்ச்வாலா - அசார் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அசார் உடன் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன், திருமணத்திற்கு பிறகும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நடிப்பேன் என்று ஷிரின் காஞ்ச்வாலா கூறியுள்ளார்.

More News

இதே நிலைமை நமக்கும் ஏற்படலாம்... 'அயலான்' ரிலீஸ் எதிர்ப்பாளர்களுக்கு விநியோகிஸ்தர் எச்சரிக்கை..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' மற்றும் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' ஆகிய திரைப்படங்கள் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படங்கள்

இசைஞானி பாடலில் என்ன ஒரு ரொமான்ஸ்.. ரஜினியின் 'பேட்ட' படத்தின் 6 நிமிட வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வெளியாகி 5 வருடங்கள் ஆனதை அடுத்து படத்தில் இடம் பெறாத காட்சியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில்

என் பொண்டாட்டி திட்ட போறா.. வீட்டிற்குள் வந்ததும் கூல் சுரேஷ் செய்த செயல்..!

 பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே எலிமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கூல் சுரேஷ் வரும் காட்சிகள் உள்ளன.

'சூர்யா 43' படத்திற்கு கார்த்தி பட நடிகை தான் நாயகியா? ஆச்சரிய தகவல்..!

சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'சூர்யா 43'  படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது

டைட்டில் வின்னர் என டைப் அடிச்சா என் பேரு தான் வருது.. வெளியே வந்தும் திருந்தாத விக்ரம் சரவணன்..!

 கூகுளில் டைட்டில் வின்னர் என டைப் அடித்தால் என்னுடைய பெயர் தான் வருகிறது என இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள விக்ரம் சரவணன் கூறி இருப்பதை பார்வையாளர்கள் கேலியும் கிண்டலும் செய்து வெளியே வந்தும்