மயக்கும் மாலையில் கணவருக்கு முத்தம்… பிரபல நடிகையின் வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,December 30 2021]

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை ஸ்ரேயா சரண் தற்போது கோவாவில் தன்னுடைய விடுமுறை நாட்களைக் கழித்து வருகிறார். அப்போது அவர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் “உனக்கு 20 எனக்கு 18” திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஸ்ரேயா பின்னர் நடிகர் ரஜினிகாந்த், ஜெயம்ரவி, விக்ரம், விஜய், தனுஷ் எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம்வந்த அவர் மலையாளம், கன்னட மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி பிசியான நடிகையாக வலம்வந்தார்.

இந்நிலையில் கடந்த 2018இல் ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டரேவ் கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு வெளிநாடுகளில் வசித்துவந்த அவர் கொரோனா நேரத்தில் “ராதா” என்ற அழகான பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இதனால் கணவர், குழந்தை என்று மகிழ்ச்சியான தருணங்களை கழித்துவரும் நடிகை ஸ்ரேயா சரண் தொடர்ந்து படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


சமீபத்தில் திரைத்துறையில் தனது 20 ஆண்டுகளை நிறைவுசெய்த இவரது நடிப்பில் ஆந்தலாஜி வகை திரைப்படமான “கமனம்“ திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்“ திரைப்படத்திலும் இவர் இடம்பெற்றிருக்கிறார். தொடர்ந்து தமிழில் இயக்குநர் கார்த்திக் நரேனின் “நரகாசுரன்“ இயக்குநர் ஆர்.மாதேஷின் “சண்டைக்காரி“ படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இப்படி திருமணத்திற்கு பிறகு படங்களில் பிசியாக இருந்துவரும் நடிகை ஸ்ரேயா தற்போது கோவாவிற்கு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அந்தி மயங்கும் சூரிய ஒளிக்கு நடுவே தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது இணையடுத்தில் படு வைரலாகி வருகிறது.

More News

வலிமை தயாரிப்பாளர் போனி கபூரின் மகன், மகளுக்கு கொரோனா பாதிப்பு!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் “வலிமை“ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக இருக்கிறது.

'வலிமை' டிரைலர் இன்று எத்தனை மணிக்கு? அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியான நிலையில் தற்போது எத்தனை மணிக்கு வெளியாகும் என்பது குறித்து அதிகாரபூர்வ

பிக்பாஸ் பிரபலத்தால் வருணுக்கு குவியும் திரைப்பட வாய்ப்புகள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்வர்கள் பிரபலமாகி திரையுலகிலும் ஒரு சிலர் ஜொலித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிக்பாஸ் 5வது சீசனில் 84 நாட்கள் விளையாடி

முதல் படம் வெற்றியால் 'மாஸ்டர்' தயாரிப்பாளரிடம் இருந்து வந்த அழைப்பு: ஆச்சரியத்தில் கோலிவுட்!

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் இளைஞர்கள் அதிக அளவில் வெற்றி படங்களை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொண்டு அடுத்தடுத்து

இன்று 'வலிமை 'டிரைலர் தினம்: ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா?

அஜித் ரசிகர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 'வலிமை திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது