close
Choose your channels

இன்று 'வலிமை 'டிரைலர் தினம்: ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா?

Thursday, December 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் ரசிகர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ‘வலிமை திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று இரவு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்றைய தினம் ‘வலிமை தினம் என சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே இந்த படத்தை மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்பதும், அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் அனைவரும் இன்று வெளியாகும் ‘வலிமை படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை இல்லாத அளவில் மிகவும் ரிஸ்க் எடுத்து பைக் ஸ்டன்ட் காட்சிகளில் அஜித் தத்ரூபமாக நடித்துள்ளார் என்பதும் தமிழ் சினிமா இயக்குனர்கள் இதுவரை தொடாத வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் இந்திய அளவில் ரசிகர்களுக்கு முழு திருப்தியை ஏற்படுத்தும் ஒரு படமாக இருக்கும் என்பதும் குறிப்பிடதக்கது. இன்று வெளியாகும் டிரைலர் மூன்று நிமிடங்கள் கொண்டது என்று கூறப்படுவதால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.