முதல்முறையாக 2வது குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்த பிரபல நடிகை: நெட்டிசன்கள் வாழ்த்து

  • IndiaGlitz, [Friday,August 28 2020]

கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த ’என்னவளே’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’ஆனந்தம்’ ’ஏப்ரல் மாதத்தில்’ ’விரும்புகிறேன்’ ’வசீகரா’ ’ஜனா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சினேகா.

இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ’அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற திரைப்படத்தில் நடித்தபோது அந்த படத்தின் நாயகன் பிரசன்னாவை காதலித்து அதன் பின்னர் அவரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற மகன் பிறந்தார் என்பதும் அதன்பின்னர் இந்த ஆண்டு ஜனவரியில் ஆத்யந்தா என்ற மகளும் பிறந்தனர் என்பது தெரிந்ததே.

இரண்டாவது மகள் ஆத்யந்தா பிறந்து 8 மாதம் ஆகியும் அந்த குழந்தையின் புகைப்படத்தை இதுவரை வெளியிடாமல் இருந்த நடிகை சினேகா, தற்போது முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டாவது குழந்தை ஆத்யந்தா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இன்று தனது கணவர் பிரசன்னாவின் பிறந்தநாளை அடுத்து அவருக்கு தனது வாழ்த்துக்களை சினேகா கூறியுள்ளார்.

இன்றைய சந்தோஷமான தினத்தில் தனது அன்பு மகள் ஆத்யந்தாவை உங்கள் எல்லோருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் சினேகா தெரிவித்துள்ளார். மகளுடன் சினேகா-பிரசன்னா இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 

More News

மன்னிப்பு கேட்காவிட்டால் கைது செய்வோம்: தமிழ் நடிகருக்கு காவல்துறை எச்சரிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தேசியக்கொடி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார்

கல்லூரி இறுதியாண்டு தேர்வு… சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு!!!

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு விலக்கு கோரிய வழக்கு… உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!!!

கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

சொன்னதை செய்த சூர்யா! கோலிவுட் திரையுலகம் வாழ்த்து

நடிகர் சூர்யா தான் நடித்து தயாரித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கொரோனா இருக்கா… வீட்டு தனிமையில் இருந்தால் ரூ.18 ஆயிரம் உதவித்தொகை!!! அதிரடி அறிவிப்பு!!!

கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் மோசமான தாக்கத்தை அனுபவித்து வந்தன.