குழந்தை நட்சத்திரமாக நடித்த டிவி சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா? ரசிகர்கள் ஆச்சரியம்!

  • IndiaGlitz, [Saturday,April 03 2021]

பாக்யராஜ் இயக்கி நடித்த ’முந்தானை முடிச்சு’ உள்பட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை சுஜிதா. அதன்பின்னர் தொலைக்காட்சி சீரியல்களிலும் ஒருசில திரைப்படங்களில் குணசித்திர நடிகையாகவும் இவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மூத்த அண்ணனின் மனைவியாக தனம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நடிகை சுஜிதாவுக்கும் விளம்பரப் படங்களை இயக்கும் தனுஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது என்பதும் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக, குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சுஜிதா, அவ்வப்போது எடுத்த போட்டோஷூட்களை பதிவுசெய்து வருவார். சீரியலில் நடிப்பது போலவே குடும்பபாங்கான போட்டோஷூட்களை தான் அவர் பெரும்பாலும் எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது மகனும் தானும் ஒரே டிசைனில் அணிந்த உடைகளை அணிந்து சமீபத்தில் அவர் போட்டோ ஷூட்டை எடுத்துள்ளார். இந்த போட்டோஷூட்டில் உள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த சுஜிதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? என்று அவருடைய மகனை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

சீனியரை முந்திய ஜூனியர்...! குமரியில் விஜய்வசந்துக்கு குவியும் ஆதரவுகள்...!

காங்கிரஸ் சார்பாக களமிறங்கும் விஜய்வசந்த் காலில் வீக்கமிருந்தும், மக்களிடையே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

திமுக வேணாம் போடா ...! நடிகை கவுதமி காரசார ட்வீட்...!

பெண்களை இழிவுபடுத்தும் திமுகவினருக்கு அரசியலில் இடமில்லை என்று நடிகை கவுதமி காரசாரமாக பதிவிட்டுள்ளார். 

கமல் யாரையும் அடிக்கவில்லை...!செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த ஸ்ரீபிரியா...!

கமல் டார்ச்-லைட்டால் அடிப்பது போன்ற உள்ள வீடியோ சித்தரிக்கப்பட்டது என மக்கள் நீதி மய்யத்தின் நட்சத்திர பேச்சாளர் ஸ்ரீபிரியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

என்னையும் ரஜினியையும் வைத்து மீடியாக்கள் விளையாடுகின்றன: கமல்ஹாசன்

என்னையும் ரஜினியையும் வைத்து மீடியாக்கள் விளையாடுகின்றன என கமல்ஹாசன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் 

என்னைப்பற்றி நினைத்தே தூக்கம் இல்லாமல் தவிக்கிறார் ஸ்டாலின்...! எடப்பாடியார் நக்கல் பேச்சு...!

முதல்வராவோம் என்று ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டு, நித்தம் என்னைப்பற்றி சிந்திப்பதால் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்