close
Choose your channels

கமல் யாரையும் அடிக்கவில்லை...!செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த ஸ்ரீபிரியா...!

Saturday, April 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல் டார்ச்-லைட்டால் அடிப்பது போன்ற உள்ள வீடியோ சித்தரிக்கப்பட்டது என மக்கள் நீதி மய்யத்தின் நட்சத்திர பேச்சாளர் ஸ்ரீபிரியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பாக மயிலாப்பூர் தொகுதியில் களமிறங்குகிறார். அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்து வருகிறார்.கோவையில், அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஸ்ரீபிரியா பேசியிருப்பதாவது,

கமல்ஹாசனுக்கு கோவையில் மிகுந்த வரவேற்பு உள்ளது. மநீம-தலைவர் உயிரை கொடுத்து மக்களுக்காக வேலை செய்து வருகிறார். கோவை மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என நினைக்கிறேன். அதனால் கமலின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நடிகரான ராதாரவி கமலுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார். மறைமுகமாக அவர் விமர்சிப்பது கமலுக்கு சாதகமாகவே அமையும். புதுவையில் கமல் பிரச்சாரத்தின் போது, டார்ச்லைட்-டால் அடிப்பது போன்று உள்ள வீடியோ சித்தரிக்கப்பட்டது. அது வெட்டி, ஒட்டப்பட்ட காணொளி என்றும் அவர் கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.