நடிகை வரலட்சுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்: செம க்யூட் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,September 01 2022]

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடிகை வரலட்சுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இதற்காக தளபதி விஜய் நேற்று சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு விமானம் மூலம் சென்றார்.

இந்த நிலையில் விமானத்தில் அவருடைய பக்கத்து சீட்டில் நடிகை வரலட்சுமி அமர்ந்திருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜய் தனது பக்கத்து சீட்டு பயணி என்ற தகவல் தெரிந்ததும் நடிகை வரலட்சுமி இன்ப அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்.

இதனை அடுத்து தளபதி விஜய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்து விஜய்யுடன் ஹைதராபாத் வரை பயணம் செய்வது தனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

தளபதி விஜய்யுடன் நடிகர் வரலட்சுமி ’சர்கார்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பதும், ‘வாரிசு’ படத்தில் வரலட்சுமியின் தந்தை சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நாளை ரிலீஸாக இருந்த முன்னணி நடிகரின் பட ரிலீஸ் ஒத்திவைப்பு:புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவரின் படம் நாளை ரிலீஸ் ஆக இருந்த நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் தேதி சென்சார் பணி காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

நீண்ட இடைவெளிக்கு பின் பழம்பெரும் பாடகியை பாட வைத்த டி.இமான்: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் பல திறமையான பாடகர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தான் இசையமைக்கும் படங்களில் பாட வாய்ப்பு அளித்து வருகிறார்

கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்: 2 ஹீரோக்கள் யார் யார் தெரியுமா?

பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகும்

இதெல்லாம் திட்டமிடப்படாமல் நடந்தது: 'டைரி' வெற்றி குறித்து அருள்நிதி அறிக்கை!

அருள்நிதி நடித்த 'டைரி'  திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, இந்த படத்தின் வெற்றியை அடுத்து அருள்நிதிஅனைவருக்கும் நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறுந்த சங்கிலி, மாஸ் புகைப்படம்: என்ன சொல்ல வருகிறார் உதயநிதி?

 உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வரிசையாக பல மாஸ் நடிகர்களின் திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கமலஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, விக்ரம், சிம்பு,