ராயல் என்ஃபீல்டு பைக்கை ஸ்டைலாக ஓட்டும் நடிகை வரலட்சுமி.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,June 05 2023]

நடிகை வரலட்சுமி ராயல் என்ஃபீல்டு பைக்கை ஸ்டைலாக ஓட்டிய வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் நடிகையும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி பிசியான நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் தற்போது அவர் ஆறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ளார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது பைக் ஓட்ட அனுமதிக்கப்படவில்லை. சில காரணங்களால் பைக் ஓட்டுவதில் எனக்கும் சில மனத்தடைகள் இருந்தது. ஆனால் அந்த பயத்தை போக்கி பைக் ஓட்ட கற்றுக்கொள்ள இதுதான் சரியான நேரம் என்று முடிவு செய்தேன்.

ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பதால் சைக்கிள், ஸ்கூட்டி என்று தொடங்கி தற்போது புல்லட் வரை வந்து உள்ளேன். முதலில் எனக்கு கொஞ்சம் கவலை, பயம் ஏற்பட்டது உண்மைதான், ஆனால் அதற்கு பிறகு என்னுடைய பயிற்சியாளர் மிகச் சிறந்த முறையில் எனக்கு கற்றுக் கொடுத்தார். பெண்கள் தங்கள் பயத்தை நோக்கி அவர்களால் செய்ய முடியாதது எதுவுமில்லை, சாதிக்க விரும்புவதை சாதித்தே தீர வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சான்று.

நாங்கள் கீழே விழுந்தாலும் கற்றுக் கொண்டோம், பயம் வந்தாலும் சவாரி செய்தோம், எப்படி முன்னேறுவது என்பதை கற்றுக் கொண்டோம்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு மற்றும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

More News

லிங்குசாமியின் 'பையா 2' படத்தில் ஆர்யா இல்லை, இந்த நடிகர் தான்..!

 லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் 'பையா'.  கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த

பிரபல நடிகர்-மிமிக்ரி கலைஞர் சாலை விபத்தில் பரிதாப பலி..! ரசிகர்கள் சோகம்..!

பிரபல நடிகர் மற்றும் மிமிக்ரி கலைஞர் சாலை விபத்தில் பலியானதையடுத்து ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்த 'கைதி' 'மாஸ்டர்' 'விக்ரம்' பட நடிகர்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான  'கைதி' 'மாஸ்டர்' 'விக்ரம்' ஆகிய மூன்று படங்களில் நடித்த நடிகர், அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

பிரபல தமிழ் ஹீரோ படத்தில் கங்கனா ரனாவத்.. இயக்குனர் யார் தெரியுமா?

பிரபல தமிழ் ஹீரோ நடிக்கும் அடுத்த படத்தின் நாயகியாக கங்கனா ரனாவத் நடிக்க  இருப்பதாகவும் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

நகைக்கடை கொள்ளையன் உண்மைக்கதையா 'ஜப்பான்'? இயக்குனர் செய்த மாற்றம்?

பிரபல நகை கொள்ளையனின் உண்மை கதைதான் கார்த்தி நடித்துவரும் 'ஜப்பான்' படத்தின் கதை என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.