புதிய காதலருடன் நெருக்கம்: ரஜினி, விஜய் பட நடிகையின் வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Monday,June 06 2022]

ரஜினி, விஜய், தனுஷ் படங்களில் நடித்த நடிகை, தனது புதிய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’, விஜய் நடித்த ’தெறி’ தனுஷ் நடித்த ’தங்க மகன்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை எமி ஜாக்சன். பிரிட்டனை சேர்ந்த எமிஜாக்சன் தொழில் அதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு முன்பே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன்பி எமிஜாக்சன் - ஜார்ஜ் திருமணம் நடந்த நிலையில் திடீரென தனது கணவர் ஜார்ஜை, எமிஜாக்சன் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜார்ஜின் அனைத்து புகைப்படங்களையும் அவர் நீக்கியதை அடுத்தே இந்த செய்தி பரவியது.

இந்த நிலையில் பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை எமிஜாக்சன் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து இவர்களது காதல் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் விரைவில் எமிஜாக்சன் - எட் வெஸ்ட்விக் திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாகவும், இங்கிலாந்து நாட்டின் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

செல்வமணியை இந்த ஒரு காரணத்திற்காக திருமணம் செய்ய மறுத்த ரோஜா!

இந்த ஒரே ஒரு காரணத்திற்காக செல்வமணியை நான் திருமணம் செய்ய மறுத்தேன் என்று நடிகை ரோஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

சுந்தர் சி அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் அட்டகாசமான போஸ்டர் வெளியீடு!

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 3' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படத்தின் டைட்டில்

விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம்: பிரபல சாமியாரின் பேச்சால் பரபரப்பு

இந்துக்களை அவமதிக்கும் வசனங்களை திரைப்படங்களில் பேசி வரும் விஜய் படங்களை பார்க்க வேண்டாம் என்று மதுரை ஆதினம் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஷ்புவை அடுத்து காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவும் தமிழ் நடிகை?

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவுக்கு தாவினார் என்பதும் அதன் பிறகு அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட

இந்த அன்பிற்கு என்ன திருப்பி தர போகிறேன்: லோகேஷ் டுவிட்டுக்கு கமல் பதில் என்ன தெரியுமா?

'இந்த அன்பிற்கு நான் என்ன திருப்பித் தரப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை' என்று உணர்ச்சிவசப்பட்டு லோகேஷ் கனகராஜ் பதிவு செய்துள்ள டுவிட்டுக்கு கமல்ஹாசன் முதிர்ச்சியுடன்