close
Choose your channels

2.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற 'அந்தகன்' பாடல்: சித் ஸ்ரீராமுக்கு குவியும் வாழ்த்துக்கள்

Thursday, March 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடிய நிலையில் அந்த பாடலுக்கு 2.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.

பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’அந்தகன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தை தமிழகத்தில் கலைப்புலி எஸ்,தாணு ரிலீஸ் செய்ய உள்ளார்

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’என் காதலும்’ என்ற பாடல் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையில், சித் ஸ்ரீராம் குரலில், விவேக் எழுதிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் வெளியான ஒரு சில நாட்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளதை அடுத்து படக்குழுவினர்களுக்கு குறிப்பாக சித்ஸ்ரீராமுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சித் ஸ்ரீராம் குரலில் உருவான புஷ்பா படத்தின் ’ஸ்ரீவள்ளி’, அண்ணாத்த படத்தின் ’சாரைக்காற்று’, நெற்றிக்கண் படத்தின் ‘இதுவும் கடந்து போகும்’, விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’, வலிமை படத்தின் ’அம்மா பாடல்’ வரிசையில் தற்போது ‘என் காதலும் பாடலும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.