சிம்புவுடன் மீண்டும் ஒரு படம்: ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்

  • IndiaGlitz, [Thursday,April 26 2018]

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சிம்பு சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும், அவரால் தான் நினைத்தபடி இந்த படத்தை இயக்க முடியவில்லை என்றும் ஆதிக் புகார் கூறினார். மேலும் இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு ரூ.20 கோடி நஷ்டம் என்றும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் சிம்புவுடன் தற்போது ஆதிக் சமாதானம் ஆகிவிட்டதாகவும், விரைவில் மீண்டும் ஒரு படத்தில் இருவரும் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலை ஆதிக் பேட்டி ஒன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். சிம்புவுடன் 'AAA'  படம் இயக்கும்போது புரிதல் இல்லாமல் இருந்தது உண்மைதான் என்றும், இப்போது இருவரும் அடிக்கடி பேசி கொள்வதாகவும் கூறிய ஆதிக், சிம்புவுக்காக ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த படம் 'AAA'  படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும், இது ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் ஆதிக் அந்த பேட்டியில் கூறியுள்ளார். தற்போது ஆதிக், ஜிவி பிரகாஷ் நடிக்கும் ரொமான்ஸ் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

வாழும் கடவுளிடம் வாழ்த்த பெற்ற தங்கப்பதக்க தமிழ்மகன்

சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார் என்பது தெரிந்ததே.

கள்ளக்காதலுக்காக குடும்பத்தையே கொலை செய்த கொடூர பெண்

தாய் என்பவர் உலகிலேயே மிகவும் புனிதமான உறவு என்றும், ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக உயிரையும் கொடுப்பார் என்றும் தான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம்.

வெற்றிக்கு பின் பொறுப்பான தந்தையாக மாறிய தல தோனி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தோனி மற்றும் ராயுடு ஆகியோர்களின் விஸ்வரூப ஆட்டத்தால் பார்வையாளர்களுக்கு ஒரு வானவேடிக்கை கிடைத்தது.

அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ்

நடிகர் பரத் நடிப்பில் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’.

தென்னகத்தில் தான்தான் தென்னவன் என் நிரூபித்த சென்னை:

அடுத்தடுத்து இரண்டு போட்டிகள். இரண்டும் தென் இந்தியாவின் மற்ற இரு அணிகளோடு என சென்னையின் பயணம் கடத்த 4 நாட்களில் செம்ம சூடு, சென்னை வெயிலைப்போலவே.