நடிப்புக்கு முழுக்கு போட்டு  விட்டாரா அதிதி ஷங்கர்.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,November 17 2023]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் அதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்திலும், ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டாக்டருக்கு படித்த நடிகை அதிதி ஷங்கர் சினிமா மீது உள்ள ஆசையில் நடிக்க வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் டாக்டர் தொழிலுக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அதிதி ஷங்கர், டாக்டர் ஏ என்று பதிவு செய்து டாக்டர் உடைகளுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

அடுத்த படத்தில் அதிதி ஷங்கர் டாக்டர் கேரக்டரில் நடிக்கிறாரா? அல்லது சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு டாக்டர் தொழிலுக்கு சென்று விட்டாரா? என்ற கேள்வியை ரசிகர்களை எழுப்பி வருகின்றனர். இதற்கு அதிதி ஷங்கரிடம் இருந்து விரைவில் பதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினி, கமல் கலந்து கொள்ளும் பிரமாண்டமான விழா.. நேரில் கொடுக்கப்பட்ட அழைப்பு..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விசித்ரா பார்ட் 2 பாக்க போறீங்க.. முதுகில் குத்தியவர்களுக்கு ஒரு சவால்.. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் விசித்ரா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் மோசமாக பெர்பார்மன்ஸ் செய்த போட்டியாளர்கள் என ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து தேர்வு செய்ததை அடுத்து இனிமேல் தான் விசித்ரா

'தளபதி 68' அப்டேட்டை  'கான்ஜூரிங் கண்ணப்பன்' புரமோவில் வெளியிட்ட சதீஷ்.. வைரல் வீடியோ

சதீஷ் நடித்த 'கான்ஜூரிங் கண்ணப்பன்'என்ற படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கார்த்தியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு.. 'கைதி' போலவே ஒரு ட்விஸ்ட்..!

கார்த்தி நடித்த 'ஜப்பான்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது என்பதும் இந்த படம்  எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

என்னை செஞ்சவங்கள திருப்பி ஏதாவது செய்யணும்ல்ல.. ஹரிஷ் கல்யாணின் 'பார்க்கிங்; டிரைலர்..!

ஒரு காரை வீட்டின் முன் பார்க்கிங் செய்வதினால் ஏற்படும் சின்ன பிரச்சனை எப்படி பெரிய பிரச்சனை ஆகி வாழ்க்கையையே திருப்பிப் போட்டு விடுகிறது என்பதை கொண்ட கதையம்சம் கொண்டது தான் 'பார்க்கிங்' திரைப்படம்.