close
Choose your channels

நடிப்புக்கு முழுக்கு போட்டு  விட்டாரா அதிதி ஷங்கர்.. வைரல் புகைப்படங்கள்..!

Friday, November 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் அதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்திலும், ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டாக்டருக்கு படித்த நடிகை அதிதி ஷங்கர் சினிமா மீது உள்ள ஆசையில் நடிக்க வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் டாக்டர் தொழிலுக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அதிதி ஷங்கர், டாக்டர் ஏ என்று பதிவு செய்து டாக்டர் உடைகளுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

அடுத்த படத்தில் அதிதி ஷங்கர் டாக்டர் கேரக்டரில் நடிக்கிறாரா? அல்லது சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு டாக்டர் தொழிலுக்கு சென்று விட்டாரா? என்ற கேள்வியை ரசிகர்களை எழுப்பி வருகின்றனர். இதற்கு அதிதி ஷங்கரிடம் இருந்து விரைவில் பதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.