close
Choose your channels

பிரபல நடிகருக்கு காதலர் தினத்தில் ரோஸ் கொடுத்த அதிதி.. சித்தார்த் ரியாக்சன்..!

Tuesday, February 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் இன்று காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி காதலிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் அவர்கள் தங்கள் காதலை பகிரங்கமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு ரோஜாப்பூ கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்து காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தர்மேந்திராவுக்கு அதிதியும், அதிதிக்கு தர்மேந்திராவும் முத்தங்களை கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

இதுகுறித்த புகைப்படங்கலை அதிதிராவ் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்தின் கமெண்ட்ஸ் பகுதியில் ஹார்ட் எமோஜி பதிவு செய்து சித்தார்த் தனது ரியாக்சனை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் நடிகர் தர்மேந்திராவுக்கு அதிதி மட்டுமின்றி மேலும் சில இளம் நடிகைகளும் ரோஜாப்பூ கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள் என்றும் இருவரும் விரைவில் திருமணம் செய்வார்கள் என்றும் கூறப்பட்டாலும் அந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட சித்தார்த் மற்றும் அதிதி ஆகிய இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர் என்பதும் அருகருகே உட்கார்ந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விரைவில் சித்தார்த் மற்றும் அதிதி தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment